உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாநில சிலம்ப போட்டியில் திருச்சுழி மாணவர்கள் சாதனை

மாநில சிலம்ப போட்டியில் திருச்சுழி மாணவர்கள் சாதனை

திருச்சுழி: திருச்சுழி வைத்திலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் முதலிடத்தை பெற்றனர்.மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி சிவகாசியில் நடந்தது. இதில் எட்டு மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகள் கலந்து கொண்டன. திருச்சுழி வைத்திலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதல் இடத்தை பெற்றனர். மேலும் தனி திறன் போட்டியில் 450 மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவிகள் விஷ்ணுபிரியா, கௌரிமாலை, ப்ரீத்திகா, மேகாஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்று பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி செயலர் பெரியனராஜன், தலைமை ஆசிரியர் செல்வராஜ், சிலம்ப ஆசான் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ