உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராஜபாளையத்தில் திருவள்ளுவர் மன்ற ஆண்டு விழா

ராஜபாளையத்தில் திருவள்ளுவர் மன்ற ஆண்டு விழா

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் திருவள்ளுவர் மன்ற ஆண்டு விழா நடந்தது. தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் முத்தரசு முன்னிலை வகித்தார். குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து உலக திருக்குறள் பேரவை தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், அனைத்தையும் விடுப்பது மட்டும் துறவறம் அல்ல இதையெல்லாம் விட்டு விட்டோம் என்பதை திரும்பி பார்க்காமல் இருப்பது தான் துறவறம்.இளம் சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு திருக்குறள் கற்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதி போதனை வகுப்புகளை பள்ளிகளில் மீண்டும் நடத்துவதன் மூலம் குற்ற செயல்களை குறைக்கலாம். வாழ்வின் கலங்கரை விளக்கமான திருக்குறளை இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும், என்றார்.தொடர்ந்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான ஓவியம், இசை, கட்டுரை, பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், அறிவுத்திறன் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை