உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரில் 5 கிலோ கஞ்சா கடத்தல்; வாலிபர் உட்பட மூவர் கைது

காரில் 5 கிலோ கஞ்சா கடத்தல்; வாலிபர் உட்பட மூவர் கைது

விருதுநகர்; விருதுநகர் முத்துவேல் தெருவைச் சேர்ந்தவர் ஜெகன்ராஜ்33, குல்லுார் சந்தையைச் சேர்ந்தவர் ராமர்36, கட்டையாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயசாரதி19. இவர்கள் மூவரும் காரில் ஓடிசா மாநிலம் எல்கையில் புவனேஸ்வர் ரோடு பகுதியில் இருந்து ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் வரையான பகுதியில் 5 கிலோ கஞ்சாவை வாங்கி பொட்டலங்களாக தயார் செய்தனர். இந்த கஞ்சா பொட்டலங்களை விருதுநகர் பகுதியில் சில்லறை விற்பனை செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நான்கு வழிச்சாலை மேம்பாலம் அருகே சிவகாசி ரோட்டில் காரில் கொண்டு வந்தனர். அப்போது விருதுநகர் பஜார் போலீசார் சோதனைச் சாவடியில் காரை சோதனை செய்த போது 5 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர். ஜெகன்ராஜ், ராமர், விஜயசாரதியை கைது செய்து, கார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை