மேலும் செய்திகள்
பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு
13-Oct-2024
விருதுநகர்: தமிழை வளர்ப்பதாக மூச்சுக்கு மூச்சு கூறும் தி.மு.க.,ஆட்சியில் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட்டில் ஆங்கிலத்தில் ஊர் பெயர் கொண்ட கால அட்டவணையை வைத்து பாமர மக்களை திணறடித்துஉள்ளனர். விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் ஆக. 21 முதல் செயல்பாட்டிற்கு இருந்து வருகிறது. இங்குள்ள கால அட்டவணையில் ஊரின் பெயர்கள் ஆங்கிலத்தில் உள்ளது. தற்போது அரசு நிர்வாகமே ஆங்கிலத்தில் கால அட்டவணையை வைத்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாமர மக்களுக்கு எழுத படிக்க தெரியாது. அவர்கள்டீக்கடைகளிலோ, அங்குஉள்ள மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்வர். ஊருக்கு புதிதாக வந்தோர் அட்டவணையை தான் முதலில் பார்ப்பர். ஆங்கிலம் தெரியாத, தமிழ் நன்றாக எழுத படிக்க தெரிந்தவர் கூட இந்த ஆங்கில கால அட்டவணையை வாசிக்க சிரமப்படுவர். நல்ல தமிழ் இருந்தும்ஏன் இது போன்ற ஆங்கிலம் என்று கேட்டு சோதனை செய்யும் அதிகாரிகள் இதை கண்காணித்து அபராதம் விதிப்பரா. அரசு நிர்வாகங்கள் தவறு செய்தால் அதற்கும் நடவடிக்கை எடுப்பது தானே சரியாகும். எனவே புது பஸ் ஸ்டாண்டில் தமிழ் கால அட்டவணையை வைக்க வேண்டும்.
13-Oct-2024