உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஏற்றுமதி அதிகரிக்க பட்டாசை வெள்ளை பிரிவில் சேர்க்க வேண்டும்

ஏற்றுமதி அதிகரிக்க பட்டாசை வெள்ளை பிரிவில் சேர்க்க வேண்டும்

சிவகாசி: ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும் வகையில் பட்டாசினை வெள்ளை பிரிவில் சேர்க்க வேண்டும் என பட்டாசு உற்பத்தி யாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்று பயணத்தில் நேற்று சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, காலண்டர் உற்பத்தியாளர்கள், அச்சகம், பேப்பர் மெர்சென்ட் உரிமையாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இக்கூட்டத்தில் தொழில் முனைவோர் வைத்த கோரிக்கை: டான்பாமா தலைவர் கணேசன்: இந்தியா முழுவதும் பட்டாசு உற்பத்தி வெள்ளை பிரிவில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் சிகப்பு பிரிவில் உள்ளது. பட்டாசு உற் பத்தியை வெள்ளை பிரிவில் சேர்த்தால் விதிமுறைகள் எளிமை யாவதுடன், ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பட்டாசு விற்பனையாளர் சங்க செயலாளர் ரவிதுரை: தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகளுக்கு உரிமத்தை மார்ச் மாதத்திற்குள் புதுப்பித்து வழங்க வேண்டும். தற்காலிக கடைகளுக்களான உரிமத்தை தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னதாக வழங்க வேண்டும். பட்டாசு கடைகளுக்கு 50 மீட்டர் சுற்றளவில் வேறு பொது பயன்பாட்டில் இருக்க கூடாது என கட்டுப்பாடு விதிப்பதை தவிர்க்க வேண்டும். மாஸ்டர் பிரிண்டர் அசோசியேசன் சார்பில் ஹரி: மூலப் பொருட்களுக்கும், உற்பத்தி பொருட் களுக்கும் இடையே உள்ள ஜி.எஸ்.டி வேறுபாடுகளை களைய வேண்டும். தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜெய்சங்கர்: சிவகாசியில் உள்ள தொழிற்சாலைகளில் 80 சதவீதம் சிறு குறு தொழில்கள் தான். தமி ழகத்தில் மின் கட்டண உயர்வால் கடந்த ஆண்டில் 4400 சிறு குறு தொழிற் சாலைகள் மூடப்பட்டு உள்ளது. மொத்த உற்பத்தி தொகையில் 25 சத வீதம் மின் கட்டணத்திற்கு செலவுசெய்ய வேண்டிய சூழல் உள்ளது. எனவே மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !