உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீரசோழன் ஏ.டி.எம்.மில் கிழிந்த ரூபாய் நோட்டுகள்

வீரசோழன் ஏ.டி.எம்.மில் கிழிந்த ரூபாய் நோட்டுகள்

நரிக்குடி : நரிக்குடி வீரசோழனில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஏ .டி .எம் .,ல் கரையான் அரித்த, கிழிந்த ரூபாய் நோட்டுகள் வருவதால் வாடிக்கையாளர்கள் வேதனை அடைந்தனர். வீர சோழனில் ஏராளமானவர்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். வெளிநாடுகளிலும் இதன் கிளை இருப்பதால் ஏராளமானோர் அந்த வங்கியில் வரவு செலவு கணக்குகள் வைத்துள்ளனர். மேலும் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வீரசோழன் வர வேண்டி இருக்கிறது. இதையடுத்து யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பாக நரிக்குடி வீரசோழனில் ஏ.டி.எம்., அமைக்கப்பட்டது.நேற்று ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்த பலருக்கு கரையான் அரித்த, கிழிந்த, கந்தல் 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் வேதனையடைந்தனர். அந்த ரூபாய் நோட்டுக்களை அப்புறப்படுத்தி புதிய ரூபாய் நோட்டுக்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கி வாடிக்கையாளர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ