உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விளைபொருட்களின் வர்த்தகம் ரூ.10.36 கோடி வருவாய்

விளைபொருட்களின் வர்த்தகம் ரூ.10.36 கோடி வருவாய்

விருதுநகர்: விருதுநகர் விற்பனைக்குழுவின் மூலம் 3.60 கோடி மெ.டன் வேளாண் விளைப்பொருட்கள் வர்த்தகம் செய்து ரூ. 10. 36 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என விற்பனைக்குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.மாவட்டத்தில் இநாம் சந்தைகளால் விருதுநகர் விற்பனைக்குழுவின் மூலம் ரூ. 19.12 கோடியில் 8665. 217 மெ.டன் வேளாண் விளைப்பொருட்கள் வர்த்தகம் செய்யப்பட்டு 1173 விவசாயிகள் பயனடைந்தனர். விருதுநகர் விற்பனைக்குழுவின் மூலம் 3.60 கோடி மெ.டன் வேளாண் விளைப்பொருட்கள் வர்த்தகம் செய்து ரூ. 10. 36 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உழவர் சந்தையில் 1.89 லட்சம் விவசாயிகளால் 50, 960 மெ.டன் காய்கறிகள், பழங்கள் ரூ. 295 கோடியில் 84 லட்சம் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அக்மார்க் திட்டத்தில் 9. 43 லட்சம் குவிண்டால் அளவு உணவு பொருட்களுக்கு அக்மார்க் தரசான்று வழங்கப்பட்டுள்ளது என விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி