மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
11 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
11 hour(s) ago
சாத்துார்: சாத்துார் நான்கு வழிச்சாலை படந்தால் ரோடு சந்திப்பில் நித்தம் போக்கு வரத்து நெருக்கடியால் பொதுமக்கள் அவதி.மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை சாத்துார் நகருக்கு நடுவில் அமைந்துள்ளது. இந்தநான்கு வழிச்சாலை சாத்துாரில் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் மேலக்காந்தி நகர், அண்ணாநகர், மற்றும் படந்தால் கிராமத்திற்கு கிழக்கு பகுதியிலும் நகரின் மெயின் ரோட்டிற்கு மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளது.இரு பகுதி மக்களும் படந்தால் ரோடு - நான்குவழிச்சாலை சந்திப்பு வழியை மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை காரணமாகவும் பெரும்பான்மையான அரசு அலுவலகம், வங்கிகள் மெயின் ரோட்டில் அமைந்திருப்பதாலும் இந்த பாதையை பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மேலும் இந்தரோடு வழியாக திருவேங்கடம், வெம்பக்கோட்டை, ஆலங்குளம், தாயில்பட்டி, சிவகாசி,ராஜபாளையம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களும் மினி பஸ்களும் தினந்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட முறை நான்கு வழிச் சாலையை கடந்து சாத்துார் நகருக்குள் சென்று திரும்புகின்றன.ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் கனரக வாகனங்கள் வெம்பக்கோட்டை ஆலங்குளம் செல்ல இந்த சந்திப்பு வழியாக நான்கு வழிச்சாலையில் திரும்பும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலில் பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்லும்போது தவறிக் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.போக்குவரத்து நெரிசல் அதிகரித்து நான்கு வழிச்சாலையில் மதுரை, கன்னியாகுமரி செல்லும் கார்கள் பஸ்கள் லாரிகள் இப்பகுதியை கடக்க இருபுறமும் காத்திருக்கும் நிலை உள்ளது. சந்திப்பில் குறுக்கே வரும் வாகனம் மீது நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க இப்பகுதியில் நான்கு வழிச்சாலை யில் பேரிக்கார்டு அமைக்கப்பட்டு உள்ளது.பல நேரங்களில் நான்குவழிச் சாலையில் வரும் வாகனங்கள் பேரிக்கார்டு மீது மோதி விபத்துகளும் ஏற்படுகின்றன. காலை மாலை நேரங்களில் நான்கு வழிச்சாலை கடக்க முயலும் பொது மக்கள் பதற்றத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. போக்குவரத்து போலீசாரும் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் மிகுந்த பணி சிரமத்திற்கு ஆளாகி தவிக்கும் நிலை உள்ளது. ஆபத்தான நிலையில் பயணிகள்
கண்ணன், சாத்துார்: பைபாஸ் ரைடர் பஸ்சில் செல்வதற்காக நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் ரோடு இருபுறமும் ஆபத்தான நிலையில் பயணிகள் நின்று பஸ் ஏறிச் செல்லுகின்றனர். மாலை மற்றும் இரவு நேரத்தில் ஆம்னி பேருந்துகளும் இந்தபகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்லுகின்றனர். இதனால் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை ஓரத்தில் பயணிகள் நின்று பஸ் ஏறுவதால் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆம்புலன்ஸ் வண்டிகளும் காத்திருக்கும்
கேஸ் குட்டி, சாத்துார்: சாத்துார் - திருவேங்கடம் செல்லும் சாலையில் இந்த படந்தால் சந்திப்பு உள்ளது. காலை மாலை நேரங்களில் அதிக அளவில் மாணவர்களும் பள்ளி வாகனங்களும் இந்த சாலையை கடந்து செல்வதால் போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படுவதை தடுக்கநான்கு வழிச்சாலையில் வரும் வானகங்களை நிறுத்துகின்றனர். இதன் காரணமாக காலை மாலை நேரங்களில் நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் நெரிசலில்சிக்கி காத்திருக்கும் நிலை உள்ளது. விரைவாக செல்வதற்காக அமைக்கப்பட்ட நான்கு வழி சாலை தற்போது நெரிசல் மிகுந்து சோதனைச் சாலையாக மாறிவிட்டது. தீர்வு
நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் தடையின்றி செல்லவும் பயணிகள் விபத்துக்கு ஆளாகாமல் தடுக்கவும் இந்தப் பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும். இதுவே இப்பகுதியில் நிலவும் டிராபிக் பிரச்சனைக்கு நிரந்தரதீர்வாகும்.
11 hour(s) ago
11 hour(s) ago