உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாலம் பணியால் போக்குவரத்து நெரிசல்

பாலம் பணியால் போக்குவரத்து நெரிசல்

சாத்துார்; சாத்துார் அண்ணாநகர் பகுதியில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.அண்ணாநகர் பகுதியில் 4 நாட்களுக்கு முன்பு இரு ஓடைகளை இணைத்து பழைய பாலத்திற்கு மாற்றாக புதிய மேம்பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.இதற்காக இருவழி பாதையாக இருந்த ரோடு ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. பாதி ரோட்டில் பள்ளம் தோண்டி விட்டு மீதி ரோட்டில் வாகனங்கள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. ஆலங்குளம் எதிர்கோட்டை வெம்பக் கோட்டை சிவகாசி தாயில்பட்டி சுப்பிரமணியபுரம் வடமலாபுரம் ரங்கப்பநாயக்கன்பட்டி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும் பஸ்களும் இந்த வழியாக கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.வசந்தம் நகர் படந்தால் தென்றல் நகர் முத்துராமலிங்கபுரம் குருலிங்கபுரம் சென்ட்ரல் எக்சைஸ் தெரு பகுதியில் இருந்து டூ வீலரில் வரும் மக்களும் இந்த வழியாக வந்தே நகருக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.நகரின் முக்கியமான போக்குவரத்து பகுதியாக உள்ள அண்ணா நகரில் பாலம் கட்டுமான பணியை விரைந்து முடித்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை