| ADDED : ஜன 17, 2024 12:43 AM
விருதுநகர் : விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே புல்லலக்கோட்டை ரோட்டின் மீனாம்பிகை பங்களா நிறுத்தத்தில் தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றுவதற்காக நீண்ட நேரம் நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.கோவில்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், சிவகாசி பகுதிகளில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்கள் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. இந்த பஸ்களின் மூலம் விருதுநகருக்கு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என காலை, மாலை நேரங்களில் அதிக கூட்ட நெரிசல் காணப்படுகிறது.இந்நிலையில் சில தனியார் பஸ்கள் மதுரைக்கு செல்லும் போது விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் அருகே உள்ள மீனாம்பிகை பங்களா நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு, ஏற்றுவதற்காக நீண்ட நேரம் நிற்கின்றன. இதனால் பயணிகளை ஏற்றி வரும் மற்ற பஸ்கள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள், ஆம்புலன்ஸ் செல்வதில் தடை ஏற்பட்டு நீண்ட நேரம் பின்னால் நிற்கவேண்டியுள்ளது.இதை தவிர்க்க வாகனங்கள் எதிர்திசையில் செல்வதால் விபத்துக்கள் நிகழ்வதும் அதிகரித்துள்ளது. எனவே மீனாம்பிகை பங்களா நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின், பஸ்கள் நீண்டநேரம் நிற்பதை தடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.