உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மரக்கிளைகள் அகற்றம்

மரக்கிளைகள் அகற்றம்

சிவகாசி: சிவகாசி தலைமை தபால் நிலையம் ரோடு பகுதியில் உள்ள மரங்களின் கிளைகள் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக ரோடு வரை நீட்டிக் கொண்டிருந்தது. இதனால் கனரக வாகனங்கள் எளிதில் செல்ல முடியவில்லை. தவிர மரக்கிளைகள் அருகில் செல்லும் மின் வயர்களில் விழுந்து அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்து துறை சார்பில் இப்பகுதியில் இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது. இதனால் வாகனங்கள் எளிதில் சென்று வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !