மேலும் செய்திகள்
கடலுார், பண்ருட்டியில் அண்ணாதுரை பிறந்த நாள்
16-Sep-2025
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட கலை விழா மும் மதத்தினர் பங்கேற்புடன் துவங்கியது. இக்கோயிலில் நேற்று முன்தினம் முதல் தேரோட்ட, கலைவிழா துவங்கியது. முத்தாலம்மன் பக்த சபா செயலாளர் வரவேற்புரையாற்றினார். விழாவில் டாக்டர் ராமசுப்பிரமணியன், தமிழ் நாடு இறையியல் கல்லூரி பேராசிரியர் குரூஸ் துரை, விருதுநகர் மாவட்ட ஜமாத் உலமா சபை செயலாளர் அப்துல் கரீம், பாஸ்டர் ஜெபக்கனி, தாசில்தார் ஆண்டாள் உட்பட பலர் பேசினர். விழாவில் பேரூராட்சி தலைவர் தவமணி, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், திருவிழா கமிட்டி நிர்வாகிகள் கோபு, மகாலிங்கம், ராமச்சந்திரன், வைகுண்டம் உட்பட பலர் பங்கேற்றனர். பக்த சபை தலைவர் சுந்தர ராஜபெருமாள் நன்றி கூறினார். அக்.8ல் தேரோட்டம் நடக்கிறது.
16-Sep-2025