உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலரில் ரூ.7.5 லட்சம் திருட்டு ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது

டூவீலரில் ரூ.7.5 லட்சம் திருட்டு ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் டூவீலர் பெட்டியில் வைத்திருந்த ரூ.7.5 லட்சத்தை திருடிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இருவரை மல்லி போலீசார் கைது செய்தனர். இருவரை தேடுகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்தவர் பெரியசாமி 65. நவ. 6ல் ஸ்ரீவில்லிபுத்துார் கனரா வங்கியில் ரூ.7.5 லட்சம் எடுத்து தனது டூவீலர் பெட்டியில் வைத்து தைலாகுளத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு நிறுத்தினார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது டூவீலரின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருந்தது.இது குறித்து விசாரித்த மல்லி போலீசார் ஆந்திர மாநிலம் கொள்ளை கும்பல் மீது சந்தேகமடைந்தனர். நாடுமுழுதும் வங்கிகள் முன்பு முகாமிட்டு, பணம் எடுத்து செல்பவர்களை பின்தொடர்ந்து சென்று திருடுவது இக்கும்பல் வழக்கம். இக்கும்பல் ஸ்ரீவில்லிபுத்துார் வந்துள்ளதும் உறுதியானது. இதையடுத்து விசாரணை நடத்தி பெரியசாமியிடம் பணம் திருடியதாக நெல்லுார் மாவட்டம் போகுல மண்டலத்தை சேர்ந்த நாகராஜ் 53, சித்துார் மாவட்டம் நகரியை சேர்ந்த வெங்கடேஷ் 30, இருவரை கைது செய்தனர், மேலும் இருவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை