உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தற்கொலைக்கு துாண்டிய இருவர் கைது

தற்கொலைக்கு துாண்டிய இருவர் கைது

காரியாபட்டி: காரியாபட்டி அச்சம்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி 35. சில மாதங்களுக்கு முன் டூ வீலர் காணாமல் போன வழக்கில், போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். இதையடுத்து மன உளைச்சல் ஏற்பட்டு, இருதினங்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். டூவீலர் திருட்டு வழக்கில் சேர்க்காமல் இருக்க போலீசுக்கு பணம் கொடுக்க வேண்டும் என அர்ஜுனன் என்பவர் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு, இதற்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அருப்புக்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் சங்கர் (பொறுப்பு) விசாரித்தார். நேற்று அர்ஜுனன் 35. நாகராஜ் 38, கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ