உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாதாள சாக்கடை பணியில் விஷவாயு தாக்கி இருவர் பலி

பாதாள சாக்கடை பணியில் விஷவாயு தாக்கி இருவர் பலி

ராஜபாளையம்,:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை மேன்ேஹாலை திறந்து பார்த்த ஒப்பந்த தொழிலாளர் ஜான்பீட்டர் 32, இன்ஜினியர் கோவிந்தன் 35, விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.ராஜபாளையம் நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.258 கோடியில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இதில் பல இடங்களில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இறுதி கட்ட பணிகள் மட்டும் தற்போது நடந்து வருகிறது.நேற்றிரவு 7:00 மணிக்கு மலையடிப்பட்டி போலீஸ் குடியிருப்பு முன் பாதாள சாக்கடையில் கழிவுநீர் செல்கிறதா என ஆய்வு செய்ய ராஜபாளையம் பச்ச மடத்தை சேர்ந்த பாதாள சாக்கடை திட்ட ஒப்பந்த தொழிலாளர் ஜான்பீட்டர், மேன்ேஹாலை திறந்த போது விஷவாயு தாக்கி மயக்கமடைந்து தொட்டிக்குள் விழுந்தார். அவர் அருகில் நின்ற திருவண்ணாமலையை சேர்ந்த இன்ஜினியர் கோவிந்தன் , அவரை மீட்க முயன்றதில் அவரும் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகி குழியின் உள்ளே விழுந்தார். உயிரிழந்த இருவர் உடலையும் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் மீட்டனர். ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி