உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திறக்கப்படாத சுகாதார வளாகம்; கழிவு நீர் தேக்கம்

திறக்கப்படாத சுகாதார வளாகம்; கழிவு நீர் தேக்கம்

ராஜபாளையம்; ராஜபாளையம் நகராட்சி 21வது வார்டில் சேதமடைந்தரோடு, குறுக்கு பாலத்தில் பாதாள சாக்கடை குழாய்களால் சிரமம், சந்து தெருக்களில் ரோடு பணிகள் முடிவடையாமல் சிக்கல் என பல்வேறு குறைபாடுடன் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.பூபால் பட்டி தெரு, அம்பலம் புலி பஜார் சில பகுதி, ரயில்வே பீடர் ரோட்டில் ஒரு பகுதி, மீனாட்சி தியேட்டர் ரோடு ஆகிய பகுதிகளை கொண்டது இந்த வார்டு. குறுகிய தெருக்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் வீடுகளின் தாழ்வாரங்கள், படிகள் பெட்டி கடைகள் எனவும், மீனாட்சி தியேட்டர் ரோட்டில் பழைய இரும்பு கடைகள் ரோட்டில் இரு பக்கமும் அடைத்து போக்குவரத்தை பாதிக்கிறது.குடியிருப்பு இடையே அமைந்துள்ள ஒயின் ஷாப் பகல் நேரங்களிலும் திறந்த வெளிபாராக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.வணிகப் பகுதிகள் ஒட்டி உள்ளதால் குடியிருப்பு அருகே திறந்த வெளியாக உபயோகிக்கின்றனர். சாக்கடைகள் முறையாக சுத்தப்படுத்தாததால் அடைத்து மழைக்காலங்களில் மட்டும் சுத்தமாகிறது.தெரு இணைப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய் தடை ஏற்படுத்தி வருகிறது. பெண்கள் மேல்நிலைப்பள்ளி பக்கவாட்டிலும், மீனாட்சி தியேட்டர் ஒயின் ஷாப் அருகிலும் நிரந்தர குப்பை குவிக்கும் இடமாக மாறியுள்ளது.பல்வேறு பகுதியினர் கடந்து செல்லும் இணைப்பு பகுதியாக உள்ளதால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. போலீசாரின் ரோந்து அவசியம்.ரோடு பணிகள் தாமதத்தால் அவசர நேரத்தில் ஆட்டோக்கள் ஆம்புலன்ஸ்கள் வந்து செல்ல முடியவில்லை ஆக்கிரமிப்புகளை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை