உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வாஜ்பாய் நுாற்றாண்டு பிறந்தநாள் விழா

 வாஜ்பாய் நுாற்றாண்டு பிறந்தநாள் விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பா.ஜ., சார்பாக முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம், நோயாளிகளுக்கு ஹார்லிக்ஸ் பழங்கள் வழங்குதல், தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர்கள் பூலோகராஜ், நாகராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் சீதாராம், துணைத்தலைவர் ராஜேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சாத்துார் சாத்துார் நகர பா.ஜ., சார்பில் முக்கு ராந்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100 வது பிறந்தநாள் விழா நடந்தது. சட்டசபை தொகுதி பொறுப்பாளர் மாரிக்கண்ணு, இணை அமைப்பாளர் முனீஸ்வரன், நகரத் தலைவர் பொன்ராஜ், சரவணன், மாவட்ட மகளிர் அணி தலைவி பாண்டி மீனா மற்றும் பலர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை