உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்

வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்

காரியாபட்டி: தூத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்த மிதுன் 26. இவரது உறவினர் சென்னையில் இறந்ததால் துக்க நிகழ்ச்சிக்கு, உறவினர்கள் 21 பேருடன் வேனில் சென்றனர். தூத்துக்குடி சென்னம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் ரங்கராஜ பெருமாள் 32, ஓட்டினார்.மது போதையில் இருந்தார். நேற்று மாலை 4:00 மணிக்கு காரியாபட்டி கல்குறிச்சி அருகே வந்தபோது, முன்னால் சென்ற காரில் உரசியது. திடீரென பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் பிரந்திகனி , சென்றாய பெருமாள் , வெள்ளையம்மாள், சிவசங்கரன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி