உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வரிச்சியூர் செல்வம் டிச.3ல் ஆஜராக உத்தரவு வரிச்சியூர் செல்வம் டிச.3ல் ஆஜராக உத்தரவு

 வரிச்சியூர் செல்வம் டிச.3ல் ஆஜராக உத்தரவு வரிச்சியூர் செல்வம் டிச.3ல் ஆஜராக உத்தரவு

விருதுநகர்: கூட்டாளி கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் உள்பட 7 பேர் டிச.3ல் ஆஜராக விருதுநகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து பின் அவரிடமிருந்து பிரிந்து வந்தவர் விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் 32. இவர் 2021ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வரிச்சியூர் செல்வம் உள்பட 7 பேரை விருதுநகர் கிழக்கு போலீசார் கைது செய்தனர். தற்போது ஜாமினில் உள்ளனர். இவ்வழக்கு விருதுநகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. வரிச்சியூர் செல்வம் உள்பட 7 பேர் நேற்று ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இதில் கிருஷ்ணகுமார், சதீஷ்குமார், பாலசுப்பிரமணியன், லோகேஷ் ஆகியோர் நேற்று ஆஜராகினர். வரிச்சியூர் செல்வம், சகாய டென்னிஸ் சரண்பாபு, ஈஸ்வர் தேஜூ ஆகியோர் ஆஜராகவில்லை. டிச.3ல் ஏழு பேரும் ஆஜராக கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.கே., அங்காள ஈஸ்வரி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை