உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் கல்லுாரி ரோட்டில் தாழ்வாக செல்லும் மின் வயர்கள் விபத்து அபாயத்தில் வாகனங்கள்

விருதுநகர் கல்லுாரி ரோட்டில் தாழ்வாக செல்லும் மின் வயர்கள் விபத்து அபாயத்தில் வாகனங்கள்

விருதுநகர்: விருதுநகர் கல்லுாரி ரோட்டில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் கனரக வாகனங்கள், கல்லுாரி பஸ்களில் உராய்வு ஏற்பட்டு விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் கல்லுாரி ரோட்டின் இருபுறமும் குடியிருப்புகள் நிறைந்து உள்ளது. மேலும் தனியார் கல்லுாரிகளுக்கு செல்லும் முக்கிய ரோடாக இருப்பதால் தினமும் கல்லுாரி மாணவர்கள் ஆயிரக் கணக்கானோர் சென்று வருகின்றனர். இந்த ரோடு வழியாக கனரக வாகனங்களும், கல்லுாரி பஸ்களும் சென்று வருகிறது. இப்படி போக்குவரத்து நிறைந்த இடமாக இருந்தும் வீடுகளுக்கும், பிற பகுதிகளுக்கும் மின்சாரம் விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட மின்வயர்கள் தற்போது தாழ்வாக செல்கின்றது. லாரிகள், பஸ்களில் தாழ்வான மின்வயர்கள் உராய்வதால் தீ விபத்து ஏற்பட்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும். மேலும் மழைக்காலத்தில் சேதமான மின்வயர்கள் கல்லுாரி பஸ்கள் மீது விழுந்து விட்டால் மாணவர்களின் உயிருக்கே ஆபத்தாக அமையும். எனவே விருதுநகர் கல்லுாரி ரோட்டில் தாழ்வாக செல்லும் மின்வயர்களை உடனடியாக சரிசெய்யும் பணிகளை மின்வாரிய ஊழியர்கள் துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி