உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம்

காரியாபட்டி : காரியாபட்டி கீழ துலுக்கன்குளத்தில் கால்நடை பராமரிப்பு துறை, பிரதான் நிறுவனம், சீட்ஸ் இணைந்து கால்நடை மருத்துவ முகாம் நடத்தினர்.பிரதான் நிறுவன மேலாளர் முருகேசன், மல்லாங்கிணர் கால்நடை மருத்துவர் திருமுருகன், வடக்கு புளியம்பட்டி ஆடு வளர்ப்பு உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆறுமுகம் முன்னிலையில் நடந்தது, 500க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், 27 மாடுகளுக்கு சிகிச்சை அளித்து, தடுப்பூசி போடப்பட்டது. சிறந்த முறையில் கால்நடை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை