உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புல்லலக்கோட்டைரோட்டில் மேம்பாலம் : பாண்டியராஜன் எம்.எல்.ஏ., உறுதி

புல்லலக்கோட்டைரோட்டில் மேம்பாலம் : பாண்டியராஜன் எம்.எல்.ஏ., உறுதி

விருதுநகர் : ''விருதுநகர் புல்லலக்கோட்டை இணைப்பு ரோட்டில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ,''பாண்டியராஜன் எம்.எல்.ஏ., தெரிவித்தார். விருதுநகர் நகராட்சி தே.மு.தி.க.,தலைவர் வேட்பாளர் சகாயமேரி நேற்று, பாண்டியராஜன் எம்.எல்.ஏ., தலைமையில், நகராட்சி தேர்தல் அலுவலர் சேர்மகனியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, நகராட்சி பகுதிகளில் தே.மு.தி.க., வேட்பாளர் சகாய மேரியை ஆதரித்து, பாண்டியராஜன் எம்.எல்.ஏ., பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: ஊழலற்ற ஆட்சியை விருதுநகர் நகராட்சியில் ஏற்படுத்துவதே எங்களது லட்சியம். நகராட்சி பகுதிகளுக்கு தினமும் குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பாதாள சாக்கடை திட்டத்தால் அலங்கோலபடுத்தப்பட்ட ரோடுகள் சீர் செய்யப்படும்.

ஓராண்டில் மட்டும் 60 பேர் உயிர்களை பலி கொண்ட தேசிய நெடுஞ்சாலையிலுள்ள புல்லலக்கோட்டை இணைப்பு ரோட்டில், ரூ.30 கோடி செலவில், நபார்டு வங்கி உதவியுடன், மேம்பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த அரசு, ஐந்து மாவட்டங்களில் ஐந்து மருத்துவ கல்லூரிக்கு கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டியது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக தற்போதைய அரசு ஆண்டுக்கு ஒரு மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி அளித்துள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜய், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர்களிடமும் இது குறித்து பேசியுள்ளேன். ஐந்து மருத்துவ கல்லூரிகளில் 2 வது இடத்தில் விருதுநகர் மருத்துவ கல்லூரி உள்ளது என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அருப்புக்கோட்டை ரோடு, விருதுநகர் கலெக்டர் அலுவலக ரோடு ஆகிய இரண்டு இடங்களில் மருத்துவ கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக தனி அலுவலர் நியமிக்கப்பட்டவுடன், பொது மக்கள் பங்களிப்புடன் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கும்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ