மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
9 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
9 hour(s) ago
விருதுநகர் : ஓட்டுச்சாவடிக்கு ஒரு அலுவலர் போல், அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பில் ஓட்டுச்சாவடிக்கு ஒரு ஏஜென்டை நிரந்தரமாக நியமிக்க, அரசியல் கட்சிகளை தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டுமே கட்சியின் சார்பில் ஓட்டுச்சாடிக்கு ஒரு ஏஜென்ட் நியமிப்பர். இவரும் அடுத்த தேர்தலில் மாற்றப்படுவர். இதை மாற்ற, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஒரு ஏஜென்டை நிரந்தரமாக நியமிக்க, தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஈடுபடும் போது, அந்த பகுதி அரசியல் கட்சி ஏஜென்டுகளுக்கு புதிய வாக்காளர்களாக யார், யாரை சேர்க்கலாம். இடம் பெயர்பவர்களை பட்டியலில் இருந்து மாற்றம் செய்தல், இறந்து போனவர்களை அடையாளம் கண்டு நீக்கம் செய்ய வசதியாக இருக்கும் என்பதால், இந்த நடைமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளது. வாக்காளர்கள் சேர்க்கும் போது கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் குறித்து, ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கும் போது, கட்சி ஏஜென்டுகளுக்கும் பயிற்சி வழங்கினால், வாக்காளர் பட்டியலில் போலிகள் இடம் பெறாமல் தடுக்க முடியும் என்பதால், அரசியல் கட்சிகளை தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது.
9 hour(s) ago
9 hour(s) ago