உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வறட்சியால் சுவை மாறிய குடிநீர் வினியோகம்

வறட்சியால் சுவை மாறிய குடிநீர் வினியோகம்

ராஜபாளையம் : வறட்சியால் ராஜபாளையத்தில் சுவை இல்லாத குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் தான் ராஜபாளையம் குடிநீருக்கு ஆதாரமாக உள்ளது. சில மாதங்களாக மழை பெய்யாததால், மலையில் இருந்து ஆறாம் மைல்கல் அணைக்கு தண்ணீர் வரவில்லை. ராஜபாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் ராஜபாளையமும் பயனடையும் வகையில் இருந்தது. நகராட்சியில் தாமிரபரணி குடிநீர் தேவை இல்லை என தீர்மானம் நிறைவேற்றியதால், அந்த குடிநீரும் கிடைக்கவில்லை. அணையை சுற்றி உள்ள ஆழ்துளை குழாய்கள், தனியார் கிணறுகள் மூலம் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் சப்ளை நடக்கிறது. குடிநீர் சுவை இல்லாமல், உவர்ப்பு தன்மையாக உள்ளது. தொடர்மழை பெய்தால் தான் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும், சுவையான குடிநீர் கிடைக்கும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை