மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
5 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
5 hour(s) ago
விருதுநகர் : இந்திய பள்ளிகள் விளையாட்டு குழும தேர்வு போட்டிகளை அக்., 10க்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இந்திய பள்ளிகள் குழுமம் சார்பில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக மண்டல, மாநில தேர்வு போட்டிள் நடத்தப்படுகின்றன. இவற்றில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்., பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளி, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். இதில் கால்பந்து, ஹாக்கி, கோ-கோ, கூடைப்பந்து, வாலிபால், கபடி, துரோபால், ஹேண்ட்பால், டேபிள் டென்னிஸ், சட்டில் பாட் மிண்டன், லான் டென்னிஸ், அத்தலெட்டிக்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், டேக்வாண்டோ, பென்சிங், ஜூடோ, செஸ், யோகா, நெட்பால், சைக்கிள்போல், டோட்ஜ்பால், பளு தூக்குதல் ஆகிய போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னை, வேலூர், கோவை, மதுரை, தஞ்சாவூர், கடலூர், சேலம், கன்னியாகுமரி மண்டலங்களில், ஆக. 31 க்குள் மண்டல தேர்வு போட்டியும், மாநில தேர்வு போட்டிகளை அக். 10 க்குள் முடிக்கும்படி, முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் எம் .ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
5 hour(s) ago
5 hour(s) ago