உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகராட்சி தலைவர் பதவி: சுழற்சி முறை மாற்றமா?

நகராட்சி தலைவர் பதவி: சுழற்சி முறை மாற்றமா?

சிவகாசி : சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி தலைவர்கள் பதவி சுழற்சி முறையில் மாற்றப்படுமா என்பதில் பொதுமக்களிடையே குழப்பம் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் கடந்த ஆண்டு இருந்த ஒதுக்கீடு நடைமுறை இந்த தேர்தலில் பின்பற்றப்படும் என மக்கள் கருதுகின்றனர். சிவகாசி நகராட்சி தலைவர் பெண் (பொது) திருத்தங்கல் நகராட்சி தலைவர் பெண் (எஸ்.சி.,) என ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு மாற்றப்படும் என கருத்து நிலவுகிறது. சிவகாசி நகராட்சி தலைவர் பதவி ஆண் பொது பிரிவாகவும், திருத்தங்கல் நகராட்சி பெண் பொது பிரிவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்ற கருத்து பலராக உள்ளது. சம்மந்தப்பட்ட நகராட்சி பொறுப்பு அதிகாரிகளோ,' சுழற்சி முறை மாற்றம் பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லை. சுழற்சி முறை 10 ஆண்டுக்கு ஒருமுறைதான் வரும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை