உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., வனப்பகுதியிலிருந்துமர வேர் கடத்தியவர்கள் கைது

ஸ்ரீவி., வனப்பகுதியிலிருந்துமர வேர் கடத்தியவர்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியிலிருந்து கடல் ஆஞ்சி(பெரிய நன்னாரி வேர்) எனும் மருத்துவ குணமுடைய வேரை கடத்தியவர்களை ஸ்ரீவி.,வனத்துறையினர் கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் மருத்துவ குணமுள்ள மரங்கள், தாவரங்கள் அதிகம் உள்ளன. இதை மலைவாழ் பகுதியை சேர்ந்த சிலரின் துணையுடன் கடத்துவதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அதிகாரி பழனிராஜ், வனவர் மூர்த்தி உட்பட வனத்துறை ஊழியர்கள் செண்பகதோப்பு அத்தித்துண்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மினிலாரியில் மருத்துவ குணமுடை கடல் ஆஞ்சி எனும் வேர் 48 மூடைகளில் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மினிலாரியை பறிமுதல் செய்து, விருதுநகரை சேர்ந்த முருகேசன், டிரைவர் பிச்சைமணியை கைது செய்து, ஸ்ரீவி.,கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி