உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அ.தி.மு.க., வேட்பாளர் மீது காங்., வேட்பாளர் புகார்

அ.தி.மு.க., வேட்பாளர் மீது காங்., வேட்பாளர் புகார்

விருதுநகர் : விருதுநகர் 33 வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஆர். பாலகிருஷ்ணன், கான்ட்ராக்டர் என்பதால் ,அவர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என, இதே பகுதி காங்., வேட்பாளர் புகார் கொடுத்தார்.விருதுநகர் நகராட்சி 33 வது வார்டில் அ.தி.மு.க., சார்பில், ஆர். பாலகிருஷ்ணன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் நகராட்சியில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர் பட்டியலில் முதல்நிலை கான்ட்ராக்டராக உள்ளார். கடந்த மார்ச் 24 ல் ஒப்பந்த உரிமத்தை புதுப்பித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைப்படி, நகராட்சி கான்ட்ராக்டராக பதிவு செய்யப்பட்டவர் தேர்தலில் நிற்க கூடாது, என கூறி, இவருடைய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என, இதே பகுதி காங்., வேட்பாளர் பாலமுருகன், நகராட்சி உதவி தேர்தல் அலுவலர் ரவிச்சந்திரனிடம் புகார் செய்தார். பின்னர் இதை பாலமுருகன் வாபஸ் பெற்றார்.தேர்தல் அலுவலர் கூறியதாவது: பாலகிருஷ்ணன் மீது கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தினோம், புகார் பொய்யானது என்பதால், மனுவை ஏற்று கொண்டோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை