மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
7 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
7 hour(s) ago
நரிக்குடி : ''நரிக்குடி பகுதியை தூய்மை கிராமமாக மாற்றுவேன், குடிநீர் பிரச்னையை தீர்ப்பேன்,'' என, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் காங்., வேட்பாளர் அகம்மது அப்துல் காதர் கூறினார்.மாவட்ட கவுன்சிலர் தவிக்கு 12 வது வார்டில் போட்டியிடும் காங்., வேட்பாளர் அகம்மது அப்துல் காதர், இவர் நேற்று முன் தினம் தனது கட்சியினர் புடைசூழ ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்தார். இதன்பின் அவர் கூறியதாவது: நரிக்குடி பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்னை உள்ளது. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நரிக்குடி பகுதிக்கு கொண்டு வந்து, அரசின் ஒத்துழைப்புடன் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்பேன். விவசாயிகள் பயன்பெறும் வகையில், நரிக்குடி பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாத பிரச்னையாக இருக்கும், கிருதுமால் நதி பிரச்சனையை தீர்க்க பாடுபடுவேன். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் தொழிற்சாலை ஏற்படுத்துவேன் . வீரசோழன் கிராமத்தை போல நரிக்குடி பகுதியை தூய்மைக் கிராமமாக மாற்றுவேன். இப்பகுதியில் மோசமாக உள்ள கிராம இணைப்புச் சாலைகள் அனைத்துயும் சீரமைப்பேன். பஸ் இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தருவேன், என்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago