உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வட பத்ரசாயி கோயிலில் தேரோட்டம்

வட பத்ரசாயி கோயிலில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் வட பத்ரசாயி கோயிலில் புரட்டாசி விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அருகே அமைந்துள்ள வடபத்ரசாயி கோயில் புரட்டாசி விழா கடந்த 29ம் தேதி கொடியேற்றுதலுடன் துவங்கியது. விழா நாட்களில் சந்திபிரபை, அனுமார், தங்க சேஷ வாகனம், யானை வாகனங்களில் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 4ம் தேதிநடந்தது. நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடபத்ரசாயி தேரில் எழுந்தருள தேரோட்டம் நடந்தது. தேரில் சுவாமி காலை 6.30க்கு மணிக்கு எழுந்தருளினாலும், தேரை இழுப்பதற்கு போதிய பக்தர்கள் இல்லாததால், என்.எஸ்.எஸ்., மாணவர்களால் தேர் இழுத்து நிலைக்கு கொண்டு வரப்பட்டது. தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் குருநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 11ம் தேதி புஷ்பயாகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை