உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  காத்திருப்பு போராட்டம்

 காத்திருப்பு போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பி.ராமச்சந்திரபுரம் பழைய சென்னல் குளத்தில் சமுதாயக்கூடத்தை இட மாற்றம் செய்து கட்டித் தரக் கோரி அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் நிர்வாகிகளும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று காலை முதல் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் நிர்வாகி பாலபாரதி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன், கிராம மக்கள் நேற்று காலை 11:00 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பி.டி.ஓ., லலிதா பேச்சுவார்த்தை நடத்தி சமுதாயக்கூடம் இடமாற்றம் செய்வது குறித்து, மாவட்ட திட்ட அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் இதனை மக்கள் ஏற்காமல், மாலை 5:00 மணியை கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ