உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்

குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்

சிவகாசி, : சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் ஓடுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.சிவகாசி அருகே செங்கமலப்பட்டி வழியாக பள்ளப்பட்டி, செங்கமலப்பட்டிக்கு மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் செல்கின்றது. இக்குழாயின் வழியாக இப்பகுதியினருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.இந்நிலையில் செங்கமலப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாக ஓடுகின்றது. இப்பகுதியில் ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதியடைந்து வருகின்ற நிலையில் குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே சேதம் அடைந்த குழாயை உடனடியாக சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை