மேலும் செய்திகள்
ராஜபாளையம் மலையில் தீ
22-May-2025
டூவீலர்---வேன் மோதல்: பாட்டி, பேரன் பலி
19-May-2025
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் அடிக்கடி சேதம் ஆகி வருவதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ராஜபாளையத்தில் மக்கள் பெருக்கத்தால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை தடுக்கவும் தடையற்ற நீர் விநியோகத்திற்காக என 42 வார்டுகளுக்கும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.இந்நிலையில் குடிநீரை சேமித்து விநியோகிப்பதற்காக அமைக்கப்பட்ட மேல்நிலை தேக்க தொட்டிகளில் இருந்து வீடுகளுக்கு வழங்கப்பட்ட மெயின் குழாய்களில் அடிக்கடி சேதம் ஏற்பட்டு வருவதும் நீண்ட நேரம் குடிநீர் ரோட்டில் வீணாவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. ராஜபாளையம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் நேற்று இக்குழாயில் கசிவு ஏற்பட்டதால் நீண்ட நேரம் தண்ணீர் பெருக்கெடுத்து ரோட்டில் வழிந்து ஓடியது.ஒரு மணி நேரத்திற்குப்பின் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. குடிநீர் சப்ளையில் அடிக்கடி ஏற்படும் கசிவுகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் கோடை காலத்தில் ரோட்டில் வழிந்து வீணாவதை தடுக்கவும் நகராட்சி துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
22-May-2025
19-May-2025