உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாதாள சாக்கடை பணியால் உடைந்த குடிநீர் குழாய்கள்

பாதாள சாக்கடை பணியால் உடைந்த குடிநீர் குழாய்கள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் நிலையில் குடிநீர் குழாய்கள் உடைவதால் குடிநீர் விநியோகம் பாதிப்படைந்து மக்கள் அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டையில் எட்டு மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்பட்டது. புறநகர் பகுதிகளான அன்பு நகர், நெசவாளர் காலனி, கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேன் ஹோல், சம்ப் தொட்டிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அன்பு நகரில் 8, 9, 10 தெருக்களில் தெருவின் நடுவில் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. குழியை தோண்டும் போது குடிநீர் பகிர்மான குழாய் இருப்பதால், அவை உடைந்து விடுகின்றன. வீடுகளில் குடிநீர் வருவது பாதிப்படைகிறது. உடைந்த பகுதியை உடனடியாக சரி செய்யாமல் விட்டு விடுவதால் மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் போகிறது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குடிநீர் குறிப்பிட்ட நாளில் தான் வரும். குழாய் உடைப்பால் மீண்டும் எங்களுக்கான முறை வரும்போது தான் நாங்கள் பிடிக்க முடியும். பகிர்மான குழாய் உடையாமல் பணிகளை செய்ய வேண்டும் என்று கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி