உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடம் வழங்காததால் தண்ணீர் பிரச்னை; ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இடம் வழங்காததால் தண்ணீர் பிரச்னை; ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாவட்ட கல்வித்துறை அலுவலகம், புள்ளியியல், நில அளவை, கைத்தறிதுறை உள்ளிட்ட அரசு துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டடம் சேதமாகி இடிந்து விழும் நிலையில் பல ஆண்டுகளாக உள்ளது.இந்த அலுவலகங்களுக்கு புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தில் இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது கைத்தறி துறை மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அலுவலகங்கள் தொடர்ந்து பழைய கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது.பழைய கட்டடத்தில் உள்ள பெண் அலுவலர்களுக்கான கழிவறைக்கு தேவையான தண்ணீர் இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் தலைமையில் அரசு துறை அலுவலர்கள் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !