மேலும் செய்திகள்
கோயில் கும்பாபிஷேகம்
7 minutes ago
இன்றைய நிகழ்ச்சி (நவ. 24)
7 minutes ago
விதிகளை மீறும் வாகனங்கள்
8 minutes ago
பள்ளியில் பட்டமளிப்பு விழா
9 minutes ago
நாளை மின்தடை காலை 9:00 மணி - மதியம் 4:00 மணி வரை
10 minutes ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் பெய்த கனமழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சில நாட்களாகவே வத்திராயிருப்பு, சுற்றுவட்ட கிராமங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி பெரியாறு அணையில் 40.8 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு வினாடிக்கு 224.38 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டது. அணையில் இருந்து 153 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கோவிலாறு அணையில் 46.8 மி.மீ., மழை பதிவான நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே இருந்தது. வத்திராயிருப்பில் 37.4 மி.மீ., மழை பதிவானது. சூறாவளி காரணமாக கூமாபட்டி ரோட்டில் இருந்த சில மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் சில மணி நேரம் மின் தடை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்துாரில் 28 மி.மீ., மழை பதிவான நிலையில் கண்மாய்களுக்கு பெரிய அளவில் நீர் வரத்து ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
7 minutes ago
7 minutes ago
8 minutes ago
9 minutes ago
10 minutes ago