உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பலமிழந்த கரைகள், பராமரிப்பு இல்லாத மதகுகள்; அருப்புக்கோட்டை பந்தல்குடி கண்மாயின் அவலம்

பலமிழந்த கரைகள், பராமரிப்பு இல்லாத மதகுகள்; அருப்புக்கோட்டை பந்தல்குடி கண்மாயின் அவலம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் உள்ள பெரிய கண்மாய் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றியும், கரைகள் பலம் இழந்தும் போனதால் தண்ணீர் சேர்வது குறைந்து போய், விவசாயம் செய்ய முடியாமல் போனது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது பந்தல்குடி ஊராட்சி. இங்குள்ள பெரிய கண்மாய் 96 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதன் அருகே 200 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது. பருத்தி. நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டன. ஊருக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது. கண்மாயை பராமரிப்பு செய்யாமல் விட்டதால் சீமை கருவேல மரங்கள், முட்புதர்கள் வளர்ந்துள்ளது. கண்மாயில் ஊரின் கழிவுநீரும், இறைச்சி கழிவுகளும், குப்பைகளும் கொட்டப்படுகிறது. கண்மாயின் ஒரு பகுதியில் கரை இல்லை. பராமரிப்பு இல்லாத மதகுகள் பழுதாகி உள்ளன. பல ஆண்டுகளாக கண்மாயில் பராமரிப்பு பணி மேற்கொள்ள படவில்லை. மழைக்காலத்தில் கண்மாயில் தண்ணீர் சேர்ந்தாலும் கரை இல்லாத பகுதி வழியாக வெளியேறி விடுகிறது. கண்மாயை ஒட்டியுள்ள தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. கரையை உயர்த்த வேண்டும். உட்பகுதியில் சீராக ஆழப்படுத்த வேண்டும். ஷட்டர்களை பழுது நீக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ