உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆதரவற்ற பெண்களுக்கு ஈரமாவு அரைக்கும் இயந்திரம்

ஆதரவற்ற பெண்களுக்கு ஈரமாவு அரைக்கும் இயந்திரம்

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான விதவை பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்த ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.10 ஆயிரம் அல்லதுஅதற்கு மேற்பட்ட மதிப்புஉள்ள உலர், ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் மானிய தொகையாக வழங்கப்படும். பயன்பெற விரும்புவோர் ஜூன் 23 முதல் ஜூலை 14 வரை புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி