உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர் தொட்டி வளாகத்தில் புதர்மண்டி கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடாமல் இருப்பது ஏன்

குடிநீர் தொட்டி வளாகத்தில் புதர்மண்டி கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடாமல் இருப்பது ஏன்

விருதுநகர் : விருதுநகர் கல்லுாரி ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி குடிநீர் தொட்டி வளாகத்தில் நகராட்சியின் பல்வேறு வாகனங்கள் புதர்மண்டி கிடக்கின்றன. விருதுநகர் கல்லுாரி ரோட்டில் நகராட்சியில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. இதன் பராமரிப்பு அறை போக பெரிய வளாகமாக உள்ளதால் பழைய நாய் வண்டி, குடிநீர் லாரி, கழிவுநீர் அகற்றும் லாரி, அலுவலருக்கான ஜீப் ஆகிய பழைய வண்டிகள் நிறைய குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவை ஏற்கனவே 15 ஆண்டுகள் கடந்த பழைய வண்டிகள் என்பதால் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் எளிதில் துருப்பிடித்து விடுவதுடன், செடி, கொடிகள் சூழ்ந்து விஷப்பூச்சிகளின் கூடாரமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் இந்த வாகனங்களை ஏல நடவடிக்கை உட்படுத்த எந்த பணியும் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.மேலும் தற்போது அதிகரித்துள்ள வாகனங்களால் வளாகத்தின் காலி பரப்பு சுருங்கி விட்டது. ஒரு பழைய கோடவுன் போல இந்த வளாகத்தை நகராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. ஆகவே ஏலம் விடாமல் புதர்மண்டி கிடக்கும் வாகனங்களை கண்டறிந்து நகராட்சி நிர்வாகம் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ