மேலும் செய்திகள்
போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
13 minutes ago
வருவாய் கிராம ஊழியர்கள் மறியல்: 34 பேர் கைது
13 minutes ago
இளம் பெண் மாயம்
14 minutes ago
தாமிரபரணி குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்----
15 minutes ago
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தின இரவுமுதல் விடிய, விடியஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை பகுதிகளில்கனமழையும், விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட மற்ற பகுதிகளில் லேசான மழையும், பகல் நேரங்களில் மேகமூட்டமும் காணப் பட்டது. இதில் அதிகபட்சமாக ஸ்ரீவி.,யில் 39 மி.மீ., வரை மழையளவு பதிவானது. விருதுநகரில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணி முதலே பரவலான மழை பெய்ததை தொடர்ந்து நள்ளிரவும் அது தொடர்ந்தது. ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. பகல் நேரங்களில் மாலை வரை மேகமூட்டமே காணப் பட்டது. ராஜபாளையம், வத்திராயிருப்பு போன்ற பகுதிகளில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு மேல் அதிகாலை 4:00 மணி வரை பலத்த இடி மின்னலுடன் மக்களை அச்சப்பட செய்யும் வகையில் கன மழை பெய்தது. இதில் மேற்கு தொடர்ச்சி மலையில் போதிய அளவிற்கு மழை பெய்யவில்லை. மலையடிவாரம் மற்றும் நகர் பகுதியில் மட்டுமே 39 மில்லி மீட்டர் மழை பதிவானதால் கண்மாய்களுக்கு போதிய அளவிற்கு தண்ணீர் வரத்து ஏற்படவில்லை. வத்திராயிருப்பில் 13.6 மில்லி மீட்டர், பிளவக்கல் பெரியாறு அணையில் 18 மி. மீ., கோவிலாறு அணையில் 13.6 மி.மீ., மழை பதிவானது. பெரியாறு அணையில் 41.5 அடி உயரத்திற்கும், கோவிலாறு அணையில் 21.06 அடி உயரத்திற்கும் தண்ணீர் உள்ளது.
13 minutes ago
13 minutes ago
14 minutes ago
15 minutes ago