உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் தவிப்பு

வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் தவிப்பு

சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கலில் வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். சிவகாசி அருகே திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் பகுதியில் திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி ஆணைகுட்டம் பகுதி விவசாயிகள் 30க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர். கிணற்று பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழைகள் தற்போது குலை தள்ளும் பருவநிலையை எட்டியுள்ளன.இந்நிலையில் இப்பகுதியில் நடமாடும் காட்டுப்பன்றிகள் உணவிற்காக வாழை மரங்களை சேதப்படுத்துகின்றது. வாழை வளரும் பருவத்திலேயே இந்தக் காட்டுப் பன்றிகள் வேரோடு சேதப்படுத்துகின்றது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். வனத்துறையினர் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேகர், விவசாயி, கிணற்று பாசனத்தை நம்பி வாழை பயிரிடப்படுகின்றது. இந்நிலையில் காட்டுப்பன்றிகள் தங்கள் உணவிற்காக வாழை மரங்களை சேதப்படுத்துகின்றது. இதனை விரட்டுவதற்கும் வழி இல்லை. இரவு முழுவதும் கண்விழித்து காவல் இருந்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வாழையில் பெரிய நஷ்டம் ஏற்படுகின்றது. வனத்துறையினர் காட்டு பன்றியை கட்டுப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை