உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செயல்படாத ஆவின் ஹைடெக் பார்லர்கள் புத்துயிர் பெறுமா

செயல்படாத ஆவின் ஹைடெக் பார்லர்கள் புத்துயிர் பெறுமா

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் செயல்படாத ஆவின் ஹைடெக் பார்லர்கள் புத்துயிர் பெறுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.விருதுநகர் அருகே பாலவனத்தத்தில் ஆவின் ஹைடெக் பார்லர் செயல்பட்டு வந்தது. 3 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லை. இது போன்ற ஹைடெக் பார்லர்கள் தமிழக அளவில் செயல்படாமல் போவதற்கு மின் கட்டண உயர்வு, ஊரகப்பகுதிகளில் இருப்பதால் போதிய விற்பனை இல்லாத சூழல், லாபம் குறைவு போன்ற காரணங்கள் உள்ளன. இது போன்ற பார்லர்கள் அதிகப்படுத்தப்படாமலே அமைத்த ஒன்றோடு நின்று விடுகிறது.ஆவினின் தலைவராக தற்போது வரை கலெக்டர் ஜெயசீலன் தான் உள்ளார். அரசின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களுள் ஆவினும் ஒன்று. அதை மேம்படுத்த புதிய தொழில் முனைவு செயல்பாடுகள் தான் கைகொடுக்கும். ஏற்கனவே அனுமதிபெற்று நகர்ப்பகுதிகளில் இயங்கும் பல ஆவின் பெட்டிகளில் ஆவின் பொருட்களே இல்லை.இந்நிலையில் ஆவின் பொருட்கள், தயாரிப்புகள் மட்டும் கிடைக்கும் ஹைடெக் பார்லர் செயல்படாமல் இருப்பது பாதிப்பை தான் தரும். எனவே மாவட்ட நிர்வாகம் ஆவின் நிர்வாகத்தின் ஹைடெக் பார்லர்களை முழுவீச்சில் செயல்படுத்தவும், அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி