புதுமனை புகு விழாவில் இறைச்சி சாப்பிட்ட பெண் பலி
விருதுநகர்:விருதுநகர் அருகே பி.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பட்ஷி ராஜா 41, இவரது மனைவி முத்துமாரி. 2 குழந்தைகள் உள்ளன. முத்துமாரி 2 ஆண்டுகளாக சில நோய்களுக்கு சிகிச்சை பெற்று மாத்திரை எடுத்து வந்தார். இந்த பிரச்னைக்கு இறைச்சி சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தாங்கள் புதிதாக கட்டிய வீட்டிற்கு செப்.14ல் புதுமனை புகுவிழா நடத்தியுள்ளார். மறுநாள் உறவினர்களுடன் ஆடு, கோழி இறைச்சி எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். செப். 18ல் காலையில் வீட்டில் இருந்த முத்துமாரிக்கு மூக்கு, வாய் வழியாக ரத்தம் வந்த நிலையில் மயங்கி விழுந்தார். இவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று போது பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.