உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளபட்டி முத்துராமலிங்கபுரத்தில் மகளிர் சுகாதார வளாகம் சேதம்

பள்ளபட்டி முத்துராமலிங்கபுரத்தில் மகளிர் சுகாதார வளாகம் சேதம்

சிவகாசி : சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சி முத்துராமலிங்கபுரம் காலனியில் பயன்பாட்டில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் சேதம் அடைந்துள்ளதால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சி முத்துராமலிங்கபுரம் காலனியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டடம் சேதமடைந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் சுகாதார வளாகம் மீண்டும் சேதமடைந்துள்ளது. தற்போதும் பயன்பாட்டில் உள்ள சுகாதார வளாகத்தின் சுவற்றில் இருந்து செங்கற்கள் விழுகின்றது.இதனால் பெண்கள் அச்சத்துடனே சென்று வர வேண்டி உள்ளது. தவிர இரவு நேரத்தில் சமூகவிரோதிகள் இடிந்த பகுதியின் வழியாக சுகாதார வளாகத்தின் உள்ளே நுழைந்து மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே சேதம் அடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி