உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டி நெடுஞ்சாலையில் பாலங்களில் அடைப்புகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

காரியாபட்டி நெடுஞ்சாலையில் பாலங்களில் அடைப்புகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

காரியாபட்டி: நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள ஓடைகள், கால்வாய்களில் மழை நீர் கடந்து செல்ல பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட பாலங்களில் நீர்வரத்து ஓடைகளில் அடைப்புகளை அப்புறப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர். காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீர் ஆங்காங்கே உள்ள கண்மாய், ஊருணி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளுக்கு செல்லும் வகையில் ஓடைகள் உள்ளன. ரோட்டை கடந்து நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டிய கிராமப்புற சாலைகளின் குறுக்கே பாலங்கள் கட்டப்படுகின்றன. பாலத்தை ஒட்டி பிளாஸ்டிக் கழிவுகள், மண் மேவி கிடப்பதால் மழை நீர் நீர்நிலைகளுக்கு செல்ல வழி இன்றி வீணாகி வருகிறது. இதனை அறிந்து, நீர்நிலைகளுக்கு மழை நீரை கொண்டு செல்லும் ஓடைகளில் மேல் உள்ள பாலங்களில் பிளாஸ்டிக் கழிவு, மண் மேவி மேடாக உள்ள அடைப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தும் பணியை துவக்கியுள்ளனர். இதையடுத்து தங்கு தடையின்றி, ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு மழை நீர் எளிதில் நீர் நிலைகளுக்கு சென்று சேரும். தற்போது காரியாபட்டி மாந்தோப்பு அழகியநல்லூர் ரோட்டில் பாலங்களில் உள்ள அடைப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். பருவமழை சமயத்தில் மழை நீர் வீணாகாமல் நீர் நிலைகளுக்கு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. இது போன்று அனைத்து பகுதிகளில் உள்ள பாலங்களிலும் அப்புறப்படுத்தும் பணியை செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ