உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குத்துச்சண்டை விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம்

குத்துச்சண்டை விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.9.45 லட்சத்தில் குத்துச்சண்டை அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு 40 மாணவர்கள் தினசரி குத்துச்சண்டை பயிற்சி எடுத்து வருகின்றனர். இவர்களுக்கென தனியாக குத்துச்சண்டை அரங்கம் இல்லாத சூழல் உள்ளது.இதையடுத்து குத்துச்சண்டை மைதானம் அமைக்க கனிம வள சினியரேஞ்ச் நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 45 ஆயிரத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. ரிங் வசதி கொண்ட மேடை, சிமென்ட் தளமும் அமைக்கப்பட்ட அரங்கமாக, மாணவர்கள் பயிற்சி எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன்மணிமாறன் கூறியதாவது: இது இலவச பயிற்சி தான். பயிற்சி பெற விரும்புவோர் வரலாம். காலை, மாலை இருவேளை பயிற்சி அளிக்கப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை