உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எழுத்தாளர் சந்திப்பு கூட்டம்

எழுத்தாளர் சந்திப்பு கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் 267 வது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது. தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். துணை செயலாளர் அங்குராஜ் வரவேற்றார். நுாலகர் கந்தசாமி இறை வணக்கம் பாடல் பாடினார். எழுத்தாளர் மகேஸ்வரியின் படைப்புகளை விமர்சித்து பேராசிரியர் சிவனேசன், எழுத்தாளர்கள் மாரிமுத்து, மணிமேகலை, பெரிய மகாலிங்கம், சுப்புராஜ், காளியப்பன் பேசினர். ஆசிரியை மகேஸ்வரி ஏற்புரையாற்றினார். ராஜபாளையம் அரசு நூலக வாசகர் வட்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ