உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மீண்டும் எக்ஸ்ரே வசதி; பணியிடங்களை நிரப்பவும் எதிர்பார்ப்பு

மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மீண்டும் எக்ஸ்ரே வசதி; பணியிடங்களை நிரப்பவும் எதிர்பார்ப்பு

விருதுநகர் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனாவுக்கு பின் எக்ஸ்ரே பரிசோதனைகள் செயல்பாட்டில் இல்லை. ரேடியோகிராபர் பணியிடங்களும் காலியாகவே உள்ளது. இவற்றை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இருந்தன. ரேடியோகிராபர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட்டு பரிசோதனைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டது.அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் எக்ஸ்ரே பரிசோதனை பராமரிப்புக்கான பணிகளை செய்யவில்லை.மேலும் கொரோனாவின்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாகஎக்ஸ்ரே மிஷின்கள் வழங்கப்பட்டது. அதன் பின் எக்ஸ்ரே பரிசோதனைகள் தொடர்ந்து செயல்படவில்லை. இங்கிருந்த மிஷின்களும் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டன.இதனால் தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கான பரிசோதனைகள், பிரசவம், மற்ற பாதிப்புகளுக்கான சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்படுகிறது.எனவே மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மீண்டும் எக்ஸ்ரே பரிசோதனையை செயல்பாட்டிற்கு கொண்டு வந்து, ரேடியோகிராபர் பணியாளர்களையும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை