உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெரிய மாரியம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் துவக்கம்

பெரிய மாரியம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நேற்று முதல் துவங்கியது.நேற்று காலையில் திருமுறை பாராயணம், வேதபாராயணம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமமும், மாலையில் சப்த கன்னி பூஜை, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.இன்று ஜூலை 30 மாலை 5: 30 மணிக்கு மேல் முதல் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. ஜூலை 2 காலை 6:35 மணிக்கு மேல் 7:35 மணிக்குள் பெரிய மாரியம்மன், கன்னி விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை