ரயில்வே ஸ்டேஷனில் தவறிய இளம்பெண் மீட்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தைச் சேர்ந்த அம்மையப்பனின் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் பாண்டீஸ்வரி 21. இவர் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று காலை காணாமல் போனார். இவரை விருதுநகர் ரயில்வே போலீசார் உடனடியாக மீட்டனர்.ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தைச் சேர்ந்தவர் அம்மையப்பன். இவரின் மகள் பாண்டீஸ்வரி மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு விருதுநகரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இவர்கள் இருவரும் மயிலாடுதுறை செல்லும் ரயலில் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று காலை 9:15 மணிக்கு இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்தனர்.ஆனால் ரயிலில் இருந்து இறங்கிய பின் பாண்டீஸ்வரி காணாமல் போனார். இதையடுத்து அம்மையப்பன் விருதுநகர் ரயில்வே போலீசில்புகார் அளித்தார். போலீசார் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் சுற்றிய பகுதிகளில் தீவிரமாக தேடி அரை மணி நேரத்திற்குள் பாண்டீஸ்வரி மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர்.